தீபாவளியையொட்டி யஷ்வந்தபுரம்-பீதர் இடையே சிறப்பு ரெயில் சேவை


தீபாவளியையொட்டி யஷ்வந்தபுரம்-பீதர் இடையே சிறப்பு ரெயில் சேவை
x

தீபாவளியையொட்டி யஷ்வந்தபுரம் - பீதர் இடையே சிறப்பு ரெயில் சேவை இயக்கப்பட்டது.

பெங்களூரு:

தீபாவளியையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு யஷ்வந்தபுரம்-பீதர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் இருந்து பீதருக்கு சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி யஷ்வந்தபுரத்தில் இருந்து வருகிற இன்று (சனிக்கிழமை) மாலை 5.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 7 மணிக்கு பீதரை சென்றடையும்.

மறுமார்க்கமாக 23-ந்தேதி (நாளை) பீதரில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 10 மணிக்கு யஷ்வந்தபுரத்தை வந்தடைகிறது. இந்த ரெயில் இருமார்க்கமாகவும் எலகங்கா, ராய்ச்சூர், யாதகிரி, கலபுரகி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story