பெங்களூரு-மைசூரு இடையே பயண நேரம் 75 நிமிடங்களாக குறையும்


பெங்களூரு-மைசூரு இடையே பயண நேரம் 75 நிமிடங்களாக குறையும்
x

பெங்களூரு-மைசூரு இடையே பயண நேரம் 75 நிமிடங்களாக குறையும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

பெங்களூரு:-

பெங்களூரு-மைசூரு இடையே ரூ.8,478 கோடியில் சுமார் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையை பிரதமர் மோடி வருகிற 12-ந் தேதி திறந்து வைக்கிறார். இதையொட்டி மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பாரத்மாலா பாரியோஜனா பெங்களூரு-மைசூரு இடையே ரூ.8,478 கோடியில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 வழி பிரதான சாலை ஆகும். அதன் இருபுறத்திலும் தலா 2 வழியில் சர்வீஸ் ரோடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலையால் பெங்களூரு-மைசூரு இடையே பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 75 நிமிடங்களாக குறையும்.

இவ்வாறு நிதின் கட்காரி குறிப்பிட்டுள்ளார்.


Next Story