15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபல்,
மத்தியபிரதேச மாநிலம் கார்ஹொன் மாவட்டம் நிமர் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு தனது ஆண் நண்பருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த இரவரையும் அதேபகுதியை சேர்ந்த 2 பேர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் சென்ற போது அந்த இரு நபர்களும், சிறுமியின் ஆண் நண்பரும் இணைந்து சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியை அவரது வீடு அருகே விட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.
தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.