வரதட்சணை கொடுமைப்படுத்தி பெண்ணை கொல்ல முயற்சி
ஹாசனில் வரதட்சணை கொடுமைப்படுத்தி பெண்ணை கொல்ல முயற்சித்த கணவன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஹாசன்:
ஹாசன் நகர் சிப்பினகட்டியை சேர்ந்தவர் ஆயிஷா. இவரது கணவர் முஜாமீல் கான். திருமணத்தின்போது ஆயிஷாவுக்கு அவரது பெற்றோர் வரதட்சணையாக 350 கிராம் தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை வழங்கினார். ஆனாலும் கடந்த சில நாட்களாக முஜாமீல் கான், ஆயிஷாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்ததால் முஜாமீல் கான் மற்றும் அவரது தாயார் பரிதானந்த், சகோதரர் சாதாத் கான் ஆகியோர் சேர்ந்து ஆயிஷாவிற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்தி உள்ளனர். நேற்று 3 பேரும் சேர்ந்து ஆயிஷா கானை தாக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆயிஷா, ஹாசன் நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story