மந்திரி முன்பு போராட்டம் நடத்த முயற்சி; காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது


மந்திரி முன்பு போராட்டம் நடத்த முயற்சி;  காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது
x

மந்திரி முன்பு போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

பெலகாவி: பெலகாவியில் தோட்டக்கலைத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் ராஜ்குமார். இவர் மீது காங்கிரஸ் பெண் பிரமுகரான நவ்யஸ்ரீ என்பவர் பெலகாவி ஏ.பி.எம்.சி. போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு புகார் அளித்தார். அதன்பேரில் ராஜ்குமார் மீது ஏ.பி.எம்.சி. போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் அவரை போலீசார் கைது செய்யவில்லை. இந்த நிலையில் நேற்று சுதந்திர தினத்தையொட்டி பெலகாவி மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி கோவிந்த் கார்ஜோள் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த நவ்யஸ்ரீ, ராஜ்குமாரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மந்திரி கோவிந்த் கார்ஜோள் முன்பு போராட்டம் நடத்த முயன்றார். இதனால் அவரை ஏ.பி.எம்.சி. போலீசார் கைது செய்தனர்.


Next Story