ஏஐ தொழில்நுட்பம் மூலம் இளம்பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்
ஏஐ தொழில்நுட்பம் மூலம் இளம்பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் ஷதோல் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்துள்ளார். அந்த வீட்டு உரிமையாளரின் மகனான சிறுவன் அந்த இளம்பெண்ணை யாருக்கும் தெரியாமல் புகைப்படம் எடுத்துள்ளான்.
மேலும், இளம்பெண்ணின் புகைப்படத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தவறாக சித்தரித்துள்ளான். மேலும், ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை இளம்பெண்ணிடம் காட்டி அதை இணைய தளத்தில் பதிவேற்றிவிடுவேன் என்று தனது நண்பனுடன் சேர்ந்து மிரட்டியுள்ளான். இதனால், இளம்பெண் அச்சமடைந்துள்ளார்.
இந்நிலையில், ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றுவிடுவேன் என கூறி இளம்ப்பெணை சிறுவனும் அவனது நண்பனான மற்றொரு சிறுவனும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுது பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.