கோர்ட்டு வளாகத்தில் கொலை குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு - அதிர்ச்சி சம்பவம்
கோர்ட்டு வளாகத்தில் கொலை குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஜமுப்பூர் மாவட்டம் தர்மபூர் சந்தை பகுதியில் கடந்த ஆண்டு படெல் என்ற மல்யுத்த வீரர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மிதிலீஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் என்ற 2 பேர் கைது செய்யப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளிகள் 2 பேரும் இன்று மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கோர்ட்டு வளாகத்தில் வைத்து குற்றவாளிகள் 2 பேர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் கோர்ட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 2 பேர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோட முயன்ற ஷர்வன்குமார் என்ற நபரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story