ராஜஸ்தான் அரசு பள்ளியில் இரும்பு உறியடி கம்பம் சாய்ந்து 2 மாணவிகள் பலி - கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் சோகம்
ராஜஸ்தான் அரசு பள்ளியில் இரும்பு உறியடி கம்பம் சாய்ந்து 2 மாணவிகள் உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்,
நாடு முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் இந்த விழா ஜென்மாஷ்டமி என அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடந்தது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் ஜோகி தலாப் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்றில் ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு நிகழ்வாக உறியடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக உயரமான இரும்பு கம்பங்கள் அமைத்து உறி தொங்கவிடப்பட்டிருந்தது. மாணவ-மாணவிகள் கம்பத்தை சுற்றி நின்று நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தபடி இருந்தனர்.
திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக உறியடி கம்பம் சாய்ந்து 7-ம் வகுப்பு மாணவி நாராயணி, 8-ம் வகுப்பு மாணவி ராதா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 3 மாணவிகள் காயம் அடைந்தனர்.
Related Tags :
Next Story