மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு : காணொலி மூலம் அமைச்சரவை கூட்டம்..!!


மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு : காணொலி மூலம் அமைச்சரவை கூட்டம்..!!
x
தினத்தந்தி 22 Jun 2022 1:23 PM IST (Updated: 22 Jun 2022 2:11 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த வேளையில், மராட்டிய மாநில முதல்-மந்திரிக்கு எதிராக ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதனிடையே, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்த்து, தங்களது ஆட்சியை அமைக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், மராட்டிய மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், ஆட்சியைக் கவிழ்க்கும் பா.ஜனதாவின் முயற்சி பலிக்காது என சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரான சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து மராட்டிய மாநிலத்தில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அம்மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதை சிவசேனாவின் சஞ்சய் ராவத் சூசகமாக தெரிவித்தார்.

இந்த சூழலில் மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. மதியம் நடக்கும் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் ராஜினாமா குறித்து உத்தவ் தாக்கரே அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் உத்தவ் தாக்கரே காணொலிகாட்சியின் மூலம் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story