பெங்களூருவில் வாகன நெரிசல் மிகுந்த சாலைகளில் தடையில்லா போக்குவரத்து


பெங்களூருவில் வாகன நெரிசல் மிகுந்த சாலைகளில் தடையில்லா போக்குவரத்து
x

பெங்களூருவில் வாகன நெரிசல் மிகுந்த சாலைகளில் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:-

இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

போக்குவரத்து நெரிசல்

பெங்களூருவில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை நிர்வகிக்க தனியாக ஒரு சிறப்பு போலீஸ் கமிஷனரை நியமித்துள்ளோம். வாகன நெரிசலை குறைக்க நவீன கண்காணிப்பு கேமராக்கள் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளன. புதிதாக 4 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் தடையில்லா வாகன போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் 9 போலீஸ் நிலையங்கள்

இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசலை நிர்வகிக்க தனியாக ஒரு கட்டுப்பாட்டு மையம் திறக்கப்படும். வருகிற நிதி ஆண்டில் மேலும் 6 போக்குவரத்து போலீஸ் நிலையங்களை தொடங்க முடிவு செய்துள்ளோம். பெங்களூருவில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க மேலும் 9 போலீஸ் நிலையங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story