சிவமொக்கா விமான நிலையம் செயல்பட மத்திய அரசு ஒப்புதல்-தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் தகவல்


சிவமொக்கா விமான நிலையம் செயல்பட மத்திய அரசு ஒப்புதல்-தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் தகவல்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா விமான நிலையம் செயல்பட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்று தொழிற்துறை மந்திரி எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் சிவமொக்கா விமான நிலையம் செயல்பட தயாராக உள்ளது. இவற்றின் செயல்பாட்டுக்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல் விஜயாப்புரா, ஹாசன் விமான நிலையங்களையும் விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி புதிதாக அமைக்கப்படும் விமான நிலையங்களை கர்நாடக அரசே நிர்வகிப்பது நல்லது.

இதனால் பொருளாதர ரீதியாக நமக்கு பயன் கிடைக்கும். மராட்டியத்தில் ஷீரடி விமான நிலையத்தை அந்த மாநில அரசே நிர்வகிக்கிறது. 2, 3 மாநிலங்களில் இத்தகைய நடைமுறை அமலில் உள்ளது. அதேபோல் கர்நாடகத்திலும் இனி அமையும் விமான நிலையங்களை நாமே நிர்வகிக்கலாம். இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். கலபுரகியில் ரூ.1,000 கோடி செலவு செய்து விமான நிலையம் அமைத்துள்ளோம்.

ஆனால் அதை மத்திய விமான நிலைய ஆணையத்திற்கு விட்டுக் கொடுத்துள்ளோம். சாணக்கியா பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை வாபஸ் பெறுவது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்வார்.

இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.


Next Story