நாளை ஒடிசா விரைகிறார் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா
மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாளை ரெயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்திக்க உள்ளார்.
புவனேஷ்வர் ,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
700 க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒடிசா விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாளை ரெயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்திக்க உள்ளார்.
புவனேஷ்வர் எய்ம்ஸ் , கட்டக் மருத்துவக்கல்லூரி சென்று விபத்தில் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை குறித்து ஆய்வு செய்கிறார்.