இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - உ.பி.யில் பயங்கரம்
உத்தரபிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் ரஸ்ரா பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் அதேபகுதியை இளைஞர் புஷ்பேந்திராவுடன் பழகியுள்ளார்.
இதனிடையே, புஷ்பேந்திரா கடந்த வெள்ளிக்கிழமை அந்த பெண்ணை தன் பைக்கில் அழைத்துக்கொண்டு கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர், அங்கு தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து புஷ்பேந்திரா அந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் செய்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது எனவும் கூறினால் கொலை செய்துவிடுவோம் எனவும் மூவரும் மிரட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புஷ்பேந்திரா, சுஷாந்த், ராஜ்குமார் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.