உத்தரபிரதேசத்தில் கார்-டிராக்டர் மோதல்: 4 பேர் உயிரிழப்பு - திருமண விழாவுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்
உத்தரபிரதேச மாநிலம் படாவுனில் கார்-டிராக்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
படாவுன்,
உத்தரபிரதேச மாநிலம் படாவுன் மாவட்டம் சிவில் லைன்ஸ் போலீஸ் நிலைய எல்லையில் ஒரு கார் நேற்று முன்தினம் இரவில் பயணித்துக் கொண்டிருந்தது. அர்சிஸ் பர்கின் கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த காரில் ஒரு திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கார், டாகிமி கிராம பகுதியில் வந்தபோது, டிராக்டரின் பின்பகுதியில் பலமாக மோதியது. இதில் 2 சிறுவர்கள் மற்றும் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story