உ.பி: திருமண நிகழ்ச்சியில் சுவர் இடிந்து விபத்து - 4 பேர் பலி


உ.பி: திருமண நிகழ்ச்சியில் சுவர் இடிந்து விபத்து - 4 பேர் பலி
x

திருமண நிகழ்ச்சியில் சுவர் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மவு மாவட்டம் கோஷி பகுதியில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி நடைபெற்றபோது திருமண வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுவர் அருகே நின்றுகொண்டிருந்த 20 பேர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கிய 16 பேரை படுகாயங்களுடன் மீட்டனர். ஆனால், இந்த சம்பவத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story