உ.பி. மாநில பட்ஜெட் இன்று தாக்கல்: உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்புகள் மீது கவனம் - நிதி மந்திரி


உ.பி. மாநில பட்ஜெட் இன்று தாக்கல்: உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்புகள் மீது கவனம் - நிதி மந்திரி
x

2022-2023-ம் ஆண்டுக்கான உத்தரப்பிரதேச மாநில பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

லக்னோ,

18-வது உத்தரபிரதேச சட்டசபையின் முதல் அமர்வு லக்னோவில் மே 23 அன்று நடைபெற்றது. இந்த நிலையில் 2022-2023-ம் ஆண்டுக்கான உத்தரப்பிரதேச மாநில பட்ஜெட் சட்டசபையில் இஇன்று தாக்கல் செய்யப்படுகிறது. உத்தரபிரதேச நிதி மந்திரி சுரேஷ் கன்னா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மீது கவனம் செலுத்தும் என்று சுரேஷ் கன்னா தெரிவித்தார்.

மாநில பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிப்போம். 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு உருவாக்கம், வேலை வாய்ப்பு உருவாக்கம், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை. தொற்றுநோய் காலத்தில் கூட நமது பொருளாதார நிலை மேம்பட்டு வருகிறது" என்று கூறினார்.


Next Story