விமான நிலையத்தில் 12 அடி உயர கடவுள் லட்சுமணன் சிலையை திறந்துவைத்த உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்...!
விமான நிலையத்தில் 12 அடி உயர கடவுள் லட்சுமணன் சிலையை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் திறந்துவைத்தார்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் லக்னோவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இதனிடையே, ஜி20 மாநாடு, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உத்தரபிரதேச அரசு தயாராகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக லக்னோ விமான நிலையத்தையும் பிரதான சாலையையும் இணைக்கும் மேம்பாலம், விமான நிலையத்தை சுற்றிலும் அழகுபடுத்தும் மேம்பாட்டு திட்டங்களை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று திறந்துவைத்தார்.
விமான நிலையத்தை சுற்றிலும் அழகுபடுத்தும் திட்டத்தில் விமான நிலையத்திற்கு வெளியே இந்து மத கடவுள் லட்சுமணனின் 12 அடி உயர சிலை நிறுவப்பட்டிருந்தது. அந்த சிலையையும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் லக்னோ தொகுதி எம்.பி.யான மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கும் பங்கேற்றார்.
Related Tags :
Next Story