மதுபானம் வாங்க பணம் தர மறுத்த தாயை அடித்துக் கொன்ற மகன்
மதுபானம் வாங்க பணம் தர மறுத்த தாயை, மகன் மரக்கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஜ்னோர்,
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் மதுபானம் வாங்க பணம் தர மறுத்த தாயை, மகன் மரக்கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்த்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள தேவேந்திர சைனி (25 வயது) என்ற இளைஞர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் நேற்று இரவு அவருடைய தாயார் சமுந்திரா தேவியிடம் (வயது 65) மதுபானம் வாங்க பணம் கேட்டுள்ளார்.
பணம் தர சமுந்திரா தேவி மறுத்ததையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சைனி மரக்கட்டையால் தாக்கியதில் அவரது தாயார் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சமுந்திரா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சைனியின் சகோதரர் ஜெய்ராம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து சைனியை கைது செய்தனர்.