மாற்று மதத்தவரை காதலித்த தங்கையை வெட்டிக்கொன்று தலையுடன் போலீஸ் நிலையத்திற்கு நடந்து சென்ற அண்ணன்


மாற்று மதத்தவரை காதலித்த தங்கையை வெட்டிக்கொன்று தலையுடன் போலீஸ் நிலையத்திற்கு நடந்து சென்ற அண்ணன்
x
தினத்தந்தி 22 July 2023 3:14 PM IST (Updated: 22 July 2023 5:11 PM IST)
t-max-icont-min-icon

தங்கையின் தலையுடன் அண்ணன் போலீஸ் நிலையத்திற்கு நடத்தே சென்றுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஆசிபா (வயது 18). இவரது சகோதரர் ரியாஸ் (வயது 22).

இதனிடையே, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆசிபாவும் அதே கிராமத்தில் இந்து மதத்தை சேர்ந்த சந்த் பாபு என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து, ஆசிபாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிபாவையும் அவரது காதலன் சந்த் பாபுவையும் கண்டுபிடித்தனர். ஆசிபாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார் சந்த் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மாற்று மதத்தை சேர்ந்த நபரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக ஆசிபாவுக்கும் அவரது அண்ணன் ரியாசுக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரியாஸ் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தங்கை ஆசிபாவின் தலையை வெட்டியுள்ளார்.

பின்னர் வெட்டி எடுத்த ஆசிபாவின் தலையுடன் வீட்டில் இருந்து நடந்தே போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இதையடுத்து, ரியாசை கைது செய்த போலீசார் ஆசிபாவின் தலையை அவரிடமிருந்து கைப்பற்றினர். பின்னர், வீட்டில் கிடந்த ஆசிபாவின் தலையில்லா உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கை மாற்று மதத்தை சேர்ந்த நபரை காதலித்ததால் அண்ணனே தங்கையின் தலையை வெட்டி எடுத்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.


Next Story