எம்.எல்.ஏ.வுக்கு திடீரென மூளை பக்கவாதம்; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
எம்.எல்.ஏ.வுக்கு திடீரென மூளை பக்கவாதம் ஏற்பட்டதால் அவர் தீவி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சிரது தொகுதி அப்னா தளம் கமீரவாடி கட்சி எம்.எல்.ஏ. பல்லவி பட்டேல். 41 வயதான பல்லவிக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழந்த பல்லவியை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பல்லவியை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டு மூளை அதன் செயலாற்றலை இழக்கும் நிலைக்கு தள்ளும் மூளை பக்கவாதம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
மூளை பக்கவாதத்தால் பாதிக்கபப்ட்ட பல்லவியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story