உப்பள்ளி குற்றப்பிரிவு போலீசில் ஒரேநாளில் 2 மோசடி வழக்குகள் பதிவு
உப்பள்ளி ஒரேநாளில் 2 மோசடி வழக்குகள் குற்றப்பிரிவு போலீசில் பதிவாகி உள்ளது.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 2 மோசடி வழக்குகள் பதிவாகின. பழைய உப்பள்ளியைச் சேர்ந்த தீபா என்பவர் முகநூல் மூலம் வேலை தேடி உள்ளார். அப்போது அதில் இருந்த ஒரு இணையதள முகவரிக்கு சென்று தனது சுய விவரத்தை பதிவிட்டுள்ளார்.
அதை பயன்படுத்தி மர்ம நபர்கள், தீபாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.96 லட்சத்தை அபேஸ் செய்துவிட்டனர். இதுபோல் தார்வார் டவுன் வித்யாநகரில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான ஒரு வீடு பெங்களூரு பெல்லந்தூரில் உள்ளது.
அந்த வீட்டை வாடகைக்கு கேட்ட ஒருவர், முன்பணம் செலுத்துவதாக கூறி வெங்கடேசின் வங்கி கணக்கு விவரங்களை பெற்று அதன்மூலம் ரூ.2.40 லட்சத்தை அபேஸ் செய்து கொண்டார். இந்த 2 மோசடி புகார்கள் குறித்தும் நேற்று புகார்கள் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.