உத்தரகாண்ட்: பாலம் இடிந்ததில் சிக்கித்தவித்த 52 பேர் பேரிடர் மீட்பு குழுவினரால் மீட்பு
பாலம் இடிந்ததால், மறுபுறம் சிக்கித்தவித்த 52 பேரை மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் பெய்த கனமழை காரணமாக, கவுண்டர் கிராமத்தில் உள்ள பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், பாலத்தின் மறுபுறம் பலர் சிக்கித் தவித்தனர்.
இதனை தொடர்ந்து, பாலத்தின் மறுபுறத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்பதற்காக மாநில மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது, ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், மீட்புப் பணியை உடனடியாக தொடங்க முடியவில்லை.
பின்னர், நீர்வரத்து குறைந்தவுடன், மீட்புப் பணியை மீண்டும் தொடங்கி, அங்கு சிக்கியிருந்த 52 பேரை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
Related Tags :
Next Story