உத்தரகாண்ட் : கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று சென்றுள்ள பிரதமர் மோடி ரூ. 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார் . பின்னர், கேதார்நாத் ரோப் கார் திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
அதன் பிறகு ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்திற்கு செல்கிறார். மந்தகினி மற்றும் சரஸ்வதி அஸ்தபத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யும் அவர் , பத்ரிநாத் கோயிலில் தரிசனம் மேற்கொள்கிறார்.
மனாவிலிருந்து கணவாய் வரை, ஜோஷிமத் முதல் மலாரி வரை சுமார் ரூ.1000 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
Related Tags :
Next Story