உத்தரகாண்டில் நிலச்சரிவு ராஜஸ்தானை சேர்ந்த 400 பக்தர்கள் தவிப்பு


உத்தரகாண்டில் நிலச்சரிவு ராஜஸ்தானை சேர்ந்த 400 பக்தர்கள் தவிப்பு
x

உத்தரகாண்ட் அரசு அதிகாரிகளும், உள்ளூர் நிர்வாகத்தினரும் இணைந்து அந்த பக்தர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து சென்றனர்

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் பில்வாரா, அஜ்மீர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 400 பக்தர்கள் உத்தரகாண்டின் கங்கோத்ரிக்கு புனித பயணம் சென்றிருந்தனர். அங்கிருந்து அவர்கள் நேற்று முன்தினம் ராஜஸ்தான் வந்து கொண்டிருந்தனர்.ஆனால் உத்தரகாசி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கப்னானி அருகே நேற்று முன்தினம் மாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் உத்தரகாசிக்கும், ஹர்சிலுக்கும் இடையே சாலை துண்டிக்கப்பட்டது.இதனால் அந்த பகுதி வழியாக போக்குவரத்து தடைபட்டது. இதனால் ராஜஸ்தான் பக்தர்களும் அங்கே சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தரகாண்ட் அரசு அதிகாரிகளும், உள்ளூர் நிர்வாகத்தினரும் இணைந்து அந்த பக்தர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது.இதைப்போல கங்கோத்ரிக்கு புனித பயணம் சென்ற வேறு சில மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களை விரைவில் சொந்த ஊர் அனுப்பும் வகையில், நிலச்சரிவால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.உத்தரகாண்ட் அரசு அதிகாரிகளும், உள்ளூர் நிர்வாகத்தினரும் இணைந்து அந்த பக்தர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து சென்றனர்


Next Story