உத்தரகாண்ட்: 39 பயணிகளுடன் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து


உத்தரகாண்ட்: 39 பயணிகளுடன் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
x

உத்தரகாண்ட் மாநிலத்தில் 39 பயணிகளுடன் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

முசோரி,

உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் பலர் காயமடைந்தனர்.

முன்னதாக இன்று பிற்பகலில் 39 பயணிகளுடன் டேராடூனில் இருந்து முசோரி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று முசோரியில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை (ஐடிபிபி) அகாடமிக்கு அருகே வந்த போது ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஐடிபிபி அகாடமியின் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். மேலும் தகவல் கிடைத்ததும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story