சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தொடக்கம்; பெங்களூரு-உப்பள்ளி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பெங்களூரு-உப்பள்ளி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னதாக பெங்களூரு-உப்பள்ளி இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க ரெயில்வேத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரெயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து அதாவது 8 பெட்டிகளை மட்டும் இணைத்து இயக்க திட்டமிட்டுள்ளனர்.
பெங்களூருவில் இருந்து 5 மணி நேரத்தில் உப்பள்ளிக்கு செல்லும் வகையில் இந்த பயணம் அமைய உள்ளது. அதன் பிறகு பெங்களூரு-ஐதராபாத் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கவும் ஆலோசித்து வருகிறார்கள். ஏற்கனவே மைசூரு-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கா்நாடக சட்டசபை தேர்தலையொட்டி உப்பள்ளிக்கு வந்தேபாரத் ரெயில் சேவையை தொடங்கினால் அதன் மூலம் பா.ஜனதாவுக்கு பலன் கிடைக்கும் என்று அக்கட்சி தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.