வந்தே பாரத் ரெயில் வருகையால் 2 ரெயில்களின் நேரம் மாற்றம்?
வந்தே பாரத் ரெயில் வருகையால் 2 ரெயில்களின் நேரம் மாற்றப்படுகிறதா?
பெங்களூரு: நாட்டில் அதிவேக ரெயிலான வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகிறது. தென்இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே வருகிற 11-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் சுமார் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை-பெங்களூரு இடையே இயக்கப்பட உள்ளது.
இதனால் சில ரெயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பிருந்தாவன் விரைவு ரெயில் (வண்டி எண்:12640) பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் மதியம் 2.50 மணிக்கு புறப்படும். ஆனால் சென்னைக்கு இரவு 8.50 மணிக்கு பதிலாக 10 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். இதேபோல் பெங்களூரு-சென்னை இடையேயான டபுள் டக்டர்(இரண்டடுக்கு) விரைவு ரெயில் பெங்களூருவில் இருந்து வழக்கம்போல் புறப்பட்டு சென்னைக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story