200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார்; இளம்பெண் உள்பட 3 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் டொடா மாவட்டத்தின் பமோ பகுதியில் நேற்று இரவு 4 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தாக்கிற்குள் விழுந்தது.
தகவல் அறிந்த விரைந்து வந்த போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தாக்கில் விபத்துக்குள்ளான காரில் இருந்த 4 பேரையும் மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மற்ற இருவரும் தீவிர சிகிச்சையில் இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 3வது நபரும் இறந்தார்.
இது குறித்து பதேர்வா எஸ்.பி வினோத் சர்மா கூறியது;
அவர்களை மீட்கும் போது பள்ளதாக்கானது மிகவும் இருளாகவும், வழுக்கும் விதமாகவும் இருந்தது. மிகவும் சிரமபட்டு அவர்களை மீட்டோம்.
தற்போது அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் உயிரிழந்தவர்கள் பிலால் அகமது (23) ,இளம்பெண் இன்ஷா அயாஸ் (19) மற்றும் முசாபர் என்றும் காயமடைந்தவர் டேனிஷ் அயாஸ் என்றும் தெரிய வந்துள்ளது