ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது குழந்தை - மீட்புப்பணிகள் தீவிரம்


ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது குழந்தை - மீட்புப்பணிகள் தீவிரம்
x

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாட்னா,

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தை சேர்ந்த பெண் தனது 3 வயது குழந்தையுடன் (பெயர் சிவம்) கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

தோட்டத்தில் அந்த பெண் வேலை செய்துகொண்டிருந்தபோது குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது.

இந்நிலையில், தோட்டத்தில் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு வெட்டப்பட்டிருந்த ஆள்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. தன் குழந்தை ஆள்துறை கிணற்றுக்குள் விழுந்ததை கண்ட தாயார் அதிர்ச்சியடைந்து கிராமத்தினரை அழைத்துள்ளார். உடனடியாக, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story