மத யாத்திரையின் போது பக்தர்கள் மீது கல்வீச்சு - பலர் காயம்
மத யாத்திரையின் போது பக்தர்கள் மீது கல்வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேசம் பரேலி மாவட்டத்தில் இந்து மதக்கடவுள் சிவ பக்தர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் இன்று மத யாத்திரையாக சென்றனர். கஞ்ச்லா கட் பகுதியில் உள்ள ஆற்றில் புனித நீர் எடுக்க பக்தர்கள் சென்றனர்.
ஜொகி நவடா பகுதியில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி அருகே யாத்திரை சென்றபோது அப்பகுதியை சேர்ந்த சிலர் யாத்திரை சென்றவர்கள் மீது கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் யாத்திரை சென்றவர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் போலீசார் அங்கு விரைந்து சென்று தாக்குதல் நடத்தியவர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுள்ளது.
Related Tags :
Next Story