'மக்களின் குரலை அரசு ஒடுக்குகிறது' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் விவாதங்களை அனுமதிக்கவில்லை என்றும், மக்களின் குரலை அரசு ஒடுக்குவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சட்டியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் விலைவாசி உயர்வு, அக்னிபத் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், இந்த பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க கோரி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து வருவதால் தொடர்ந்து அமளி ஏற்பட்டு நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு அனுமதி அளிக்காததன் மூலம், இன்று நாட்டு மக்களின் குரல் வெளிப்படையாகவே ஒடுக்கப்படுகிறது. ஆனால் அரசின் இந்த ஆணவத்தையும் சர்வாதிகாரத்தையும் உண்மை முறியடிக்கும்' என குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story