பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராகிறார் மம்தா பானர்ஜி...!
மேற்கு வங்க பல்கலைக்கழகங்களுக்கு, முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை வேந்தராக்க முடிவு செய்து மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஜெகதீப் தங்கார் பதவி வகித்து வருகிறார். இந்த பதவியை அவரிடம் இருந்து முதல்-மந்திரிக்கு மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து முதல்வரை பல்கலைக்கழங்களின் வேந்தர் ஆக்க வகை செய்யும் சட்ட மசோதா உருவாக்கப்பட்டு விரைவில் சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது.
நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் உள்ளனர். மாநிலங்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பல்கலைக் கழக வேந்தர்கள் பதவியை மாநில முதல்-மந்திரிகளே வகிக்க வேண்டும் என்பது நீண்டகால குரல் ஆகும்.
Related Tags :
Next Story