பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த பாஜகவை அனுமதிக்க மாட்டோம் - ராகுல் காந்தி
பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த பாஜகவை அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகனுக்கு சொந்தமான ரிஷிகேஷ் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் வரவேற்பாளர் ஆக பணியாற்றி வந்த அங்கிதா விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக கடந்த சனிக்கிழமை காலை மீட்கப்பட்டார்.
இது குறித்து 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற அந்த இளம்பெண்ணின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா மீது போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யாவின் தந்தையான பாஜகவின் வினோத் ஆர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த பாஜகவை அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "இந்தியாவின் பெண்கள் நமது மிகப்பெரிய பலம். ஆனால், பா.ஜ.க.வினரால் அவர்கள் 'பொருட்களாக' நடத்தப்படுகின்றனர். இதற்கு உத்தரகாண்டில் நடந்த அங்கிதா கொலையே மிகவும் கேவலமான உதாரணம். பாஜகவின் முதல்-மந்திரி குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க அனைத்து ஆதாரங்களையும் அழிக்கும் பணியை செய்தார். பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த பாஜகவை அனுமதிக்க மாட்டோம்' என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.