பெங்களூருவில் மசூதி இடிந்து மேற்கு வங்க தொழிலாளி சாவு
பெங்களூருவில் மசூதி இடிந்து மேற்கு வங்க தொழிலாளி பலியான சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
மசூதி இடிந்தது
பெங்களூரு சிட்டி மார்க்கெட் பகுதியில் பழமையான மசூதி ஒன்று உள்ளது. அந்த மசூதியை இடிக்கும் பணி நடைபெற்றது. அதில் தொழிலாளர்கள் 2 பேர் பணி செய்தனர். இந்த நிலையில் நேற்று பணியின்போது மசூதியின் முதல் தளம் திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது அந்த தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து சிட்டி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை மீட்டனர். மேலும் படுகாயம் அடைந்தவரை மீட்டு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த அசார் உல் ஹாக் என்பதும், படுகாயம் அடைந்தவர் சிம்சு என்பதும் தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காண்டிராக்டர் ரியாஷ் பாஷாவை வலைவீசி தேடி வருகின்றனர்.