தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்


தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்
x

‘தேன்கூட்டில் கை வைத்த பசவராஜ் பொம்மை’

'தேர்தலில் வாக்காளர்களை கவர வேண்டும் அவசரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள் இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளார். அவர் தேன்கூட்டில் கை வைக்கவில்லை. தனது அடிமைகள் மூலம் தேன்கூட்டில் கை வைத்துவிட்டார். தேன்கூடு முழுமையாக கலைந்தால் அனைவரும் கடிபடுவது நிச்சயம். இடஒதுக்கீட்டின் மூலம் தேன்கூட்டை கலைத்து விடலாம் என்ற பசவராஜ் பொம்மையின் திட்டம் ஈடேராது.'

- காங்கிரஸ் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி

'தைரியம் இருந்தால் சொத்து

விவரங்களை பகிரங்கப்படுத்துங்கள்'

'தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். தங்களிடம் உள்ள பணம், நகைகள், வாகனங்கள், அசையும், அசையா சொத்துகள் என அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவரிடம் ரூ.600 கோடி, இன்னொருவரிடம் ரூ.800 கோடி, மற்றொருவரிடம் ரூ.1,200 கோடி சொத்து இருப்பதாக பிரமாண பத்திரத்தில் கணக்கு காட்டுகிறார்கள். அவர்களுக்கு தைரியம் இருந்தால் அந்த சொத்து எங்கிருந்து வந்தது என்பதை பங்கிரங்கப்படுத்த வேண்டும்.'

- முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார்.

'மல்லிகார்ஜுன கார்கே தோல்விக்கு காரணம் சித்தராமையா'

'கே.எச்.முனியப்பா, முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் தோல்விக்கு சித்தராமையா தான் காரணம். அவர்களை தோற்கடிக்க சித்தராமையா பணம் கொடுத்துள்ளார். சித்தராமையா தலித் மக்களின் விரோதி. 5 வருடம் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையாவுக்கு தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதிகூட இல்லை. 25 தொகுதிகளில் இருந்து போட்டியிட தனக்கு அழைப்பு வந்ததாக கூறி சித்தராமையா நாடகம் ஆடுகிறார்.'

- மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி

'மக்களை ஏமாற்றும் காங்கிரஸ்'

'பஞ்சாரா மற்றும் போவி சமூகத்தினர் முதலில் தங்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு தான் கேட்டார்கள். ஆனால் அவர்களுக்கு கர்நாடக பா.ஜனதா அரசு 4.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது. இதை காங்கிரசாரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த சமூகத்தினர் வாக்கு எங்கு தங்கள் கைநழுவி போய்விடுமோ என்று கருதுகிறார்கள். அதனால்தான் அவர்கள் 4.5 சதவீத இடஒதுக்கீடு தங்கள் முயற்சியால்தான் கிடைத்ததாக கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள்.'

- பா.ஜனதா எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லத்.

அரசியல் லாபம் தேடும் பா.ஜனதாவினர்

'பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்த பா.ஜனதாவினரே ஆட்களை திரட்டி அனுப்பி இருக்கிறார்கள். அரசியல் லாபம் தேட அவர்கள் இவ்வாறு செய்திருக்கிறார்கள். இதன்மூலம் மக்களிடையே கலவரத்தை பற்ற வைக்க பா.ஜனதாவினர் முயற்சி மேற்கொள்கிறார்கள்'.

-காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா.


Next Story