பிறந்தநாள் கொண்டாட மைசூரு சென்றபோது கார்-ஜீப் மோதி விபத்து; பெண் சாவு


பிறந்தநாள் கொண்டாட மைசூரு சென்றபோது கார்-ஜீப் மோதி விபத்து; பெண் சாவு
x
தினத்தந்தி 11 Oct 2022 12:30 AM IST (Updated: 11 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பிறந்த நாள் கொண்டாட மைசூரு சென்றபோது கார் மீது ஜீப் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். மேலும் கணவர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிக்கமகளூரு;


பிறந்த நாள் கொண்டாட்டம்

சிக்கமகளூரு டவுன் சங்கர்புரா பகுதியை ேசர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவர் அதே பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி காவ்யா (30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கார்த்திக் இளைய சகோதரர் மனைவி லாவண்யா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவா்கள் ஆவார்கள்.

இதில் காவ்யாவுக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். இதனால் இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் காவ்யாவின் பிறந்த நாளை ெகாண்டுவதற்காக மைசூரு செல்வதற்காக முடிவு செய்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் காரில் மைசூருவுக்கு கிளம்பினர். இந்த நிலையில் அவர்கள் பேலூர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் எதிரே ஜீப் ஒன்று வந்து கொண்டிருந்தது.

கார்-ஜீப் மோதல்

இந்த நிலையில் திடீரென கண்இமைக்கும் நேரத்தில் காரும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் ெநாறுங்கியது. மேலும் காரின் முன்பகுதியில் உட்கார்ந்து இருந்த காவ்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் காரை ஓட்டி வந்த கார்த்திக் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து காரில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்கள் 6 பேரையும் ஹாசனில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜீப்பில் வந்தவா்கள் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து பேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் உயிரிழந்த காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story