'குஜராத்தில் இருந்து 2-வது நடைபயணத்தை தொடங்குங்கள்' ராகுல் காந்திக்கு மாநில காங். அழைப்பு


குஜராத்தில் இருந்து 2-வது நடைபயணத்தை தொடங்குங்கள் ராகுல் காந்திக்கு மாநில காங். அழைப்பு
x

குஜராத்தில் இருந்து 2-வது நடைபயணத்தை தொடங்குங்கள்’ என ராகுல் காந்திக்கு மாநில காங். அழைப்பு விடுத்துள்ளது.

ஆமதாபாத்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து 2-வது கட்ட யாத்திரையை குஜராத்தில் இருந்து தொடங்குமாறு அவருக்கு மாநில காங்கிரஸ் அழைப்பு விடுத்து உள்ளது.

இது தொடர்பாக மாநில சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான அமித் சாவ்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், '2-வது இந்திய ஒற்றுமை பயணத்தை குஜராத்தில் இருந்து தொடங்குமாறு ராகுல் காந்திக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். ஏனெனில் இது மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேல் பிறந்த மண். எனவே அவரது 2-வது யாத்திரை இங்கிருந்தே தொடங்க வேண்டும்' என தெரிவித்தார்.


Next Story