வளர்ச்சிப்பணிகள் எங்கே ? பாஜக தலைவரை மறித்து கேள்வி எழுப்பிய மக்கள்..!
வீட்டு வசதிதுறை மந்திரி வி.சோமண்ணா பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, ஒரு பகுதியில் மக்கள் அவரை மறித்து கேள்வி எழுப்பினர்.
மைசூரு,
கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே உள்ளன. இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து வீட்டு வசதிதுறை மந்திரி வி.சோமண்ணா போட்டியிடுகிறார். வருணா தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது. அவர்கள் வருணா தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று மைசூரு மாவட்டத்தில் உள்ள வருணா தொகுதியில் வீட்டு வசதிதுறை மந்திரி வி.சோமண்ணா பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, ஒரு பகுதியில் மக்கள் அவரை மறித்து கேள்வி எழுப்பினர்.தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து மக்கள் மந்திரி வி.சோமண்ணாவிடம் கேள்வி எழுப்பினர். இதனை சிலர் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர்
அப்போது வி.சோமண்ணா வீடியோ பதிவு மேற்கொள்வதை தடுக்க முயன்றது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது