பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட்டின் மனைவிக்கு நிரந்தர அரசு வேலை கவர்னர் அறிவிப்பு


பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட  காஷ்மீர் பண்டிட்டின் மனைவிக்கு நிரந்தர அரசு வேலை  கவர்னர் அறிவிப்பு
x

இவர் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு,

காஷ்மீரில் ஜம்முவில் உள்ள சவுதாரிகுண்ட் கிராமத்தை சேர்ந்தவர் புரான் கிருஷ்ணன் பட். பழ வியாபாரியான இவர், காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்.

இவர் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு காஷ்மீர் ப்ரீடம் பைட்டர் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இந்தநிலையில், புரான் கிருஷ்ணன் பட் வீட்டுக்கு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா நேரில் சென்றார். அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். புரான் கிருஷ்ணன் பட் மனைவிக்கு நிரந்தர அரசு வேலை அளிக்கப்படும் என்றும், சாத்தியமான எல்லா உதவிகளும் அக்குடும்பத்துக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story