கணவர் கழுத்தை அறுத்துவிட்டு மனைவி தூக்கு போட்டு தற்கொலை: காரணம் என்ன...?
கணவர் கழுத்தை அறுத்துவிட்டு மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இடுக்கி,
இடுக்கி மாவட்டம் குலமாவு பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (69), இவர் மனைவி மினி (54) சுகுமாரன் ரயில்வே துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர், இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது, குலமாவு பகுதியில் கணவன் மனைவி இருவரும் சொந்த வீட்டில்இருந்து வந்தனர், பணி ஓய்வு பெற்ற பின்பு சுகுமாரனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது,
இந்நிலையில்சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டருகே நடந்து வந்த பொழுது சுகுமாரன் கால் இடறி கீழே விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உடல் செயலிழந்து படுக்கையில் விழுந்து விட்டார், படுக்கை நோயாளியாக இருந்து வந்த சுகுமாரனை அவர் மனைவியும், மற்றும் ஹோம் நர்ஸ் பணி செய்யும் சோனியா என்ற பெண்ணும்கவனித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஹோம் நர்ஸ் பணி செய்யும் சோனியா படுக்கை நோயாளியான சுகுமாரனை கவனிப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளார், அப்பொழுது வீடு திறந்து கிடக்கவே வீட்டுக்குள் எந்த விதமான சத்தமும் இல்லாமல் இருந்துள்ளது, சோனியா வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது வீட்டின் ஒரு அறையில் மினி தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு உள்ளார், சுகுமாரன் அவர் எப்பொழுதும் படுத்திருக்கும் கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவர்உயிருக்கு போராடி கொண்டிருப்பதை சோனியா கண்டுள்ளார், உடனே இது குறித்து சோனியா குலமாவு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்து அங்கே வந்த குலமாவு போலீஸ் உயிருக்கு போராடிய சுகுமாரனை இடுக்கி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மினி உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரியில் உடலை பிரேத பரிசோதனை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். போலீஸ் நடத்திய முதல் கட்ட விசாரணையில் உடல் நலம் பாதித்து கஷ்டப்படும் கணவரை கண்டு மனம் பொறுக்காத மனைவி மினி கணவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய நினைத்துள்ளார். அதன் படி கணவர் கழுத்தை அறுத்துவிட்டு அவர் இறந்ததாக நினைத்து மினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்துள்ளது. ஆனால் கழுத்து சரிவர அறுக்கப்படாத காரணத்தால் சுகுமாரன் இறக்கவில்லை, குலமாவு போலீஸ் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேல்விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.