கழுத்தை அறுத்து மனைவி கொலை; பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை


கழுத்தை அறுத்து மனைவி கொலை; பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Oct 2022 12:30 AM IST (Updated: 28 Oct 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு பெயிண்டர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மங்களூரு;


பெயிண்டர்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பஞ்சந்தாயாகோவில் பகுதியை சேர்ந்தவர் சிவானந்த பூஜாரி (வயது 55). ெபயிண்டர். இவரது மனைவி ஷோபா பூஜாரி (45). இந்த தம்பதிக்கு காவியா என்ற மகளும், கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். இதில் காவியாவுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆகியது.

கார்த்திக் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை கார்த்திக் வேலைக்கு சென்று இருந்தார். இதையடுத்து கார்த்திக் தனது தாய் ஷோபாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது ஷோபாவின் செல்போன், ரீசார்ஜ் செய்யப்படாமல் இருந்ததாக வந்துள்ளது.

2 பேர் உடல்கள்

பின்னர் அவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் சகுந்தலா என்பவருக்கு தொடர்பு கொண்டு தனது தாய் ஷோபாவிடம் போனை கொடுக்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து சகுந்தலா செல்போனை எடுத்து கொண்டு ஷோபாவின் வீட்டுக்கு ெசன்றுள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் ஷோபா, ரத்த ெவள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ேமலும் வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் சிவானந்த பூஜாரி தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ந்து போன சகுந்தலா, இதுபற்றி கார்த்திக்கிடம் தெரிவித்தார். மேலும் உல்லால் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நடத்தையில் சந்தேகம்

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவானந்த பூஜாரி, அடிக்கடி ஷோபாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் அதேபோன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story