குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை


குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை
x

பங்காருபேட்டையில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் போலீசில் சரணடைந்தார். அவரை கைது ெசய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கோலார் தங்கவயல்:-

மனைவி கொலை

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகாவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45), தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (35). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அக்கம் பக்கத்தினர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவ நாகராஜ் வெளியே சென்றுவிட்ட வீட்டிற்கு திரும்பினார். அப்போது மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நாகராஜ் மனைவி என்றும் பாராமல், கத்தியை எடுத்து வந்து சரமாரியாக நந்தினியை குத்தினார். இதில் நந்தினியின் வயிறு மற்றும் இதயப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் உயிருக்காக போராடி கொண்டிருந்த, நந்தினி உயிரிழந்தார்.

போலீசில் சரண்

இதை பார்த்த நாகராஜ் கத்தியுடன் பங்காருபேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அப்போது குடும்ப தகராறில் தான் மனைவியை கொலை செய்ததாக கூறினர். இதை கேட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பங்காருபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கொலை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக பங்காருேபட்டை போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி பங்காருேபட்டை போலீசார் நாகராஜை கைது தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story