திருடிய பொருட்களுடன் போலீசில் சரணடைந்த காவலாளி
திருடிய பொருட்களுடன் காவலாளி போலீசில் சரணடைந்தார்.
பெங்களூரு: பெங்களூரு சந்திரா லே-அவுட் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தார்கள். இதுகுறித்து சந்திரா லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தாா்கள். அப்போது ஒரு ஸ்கூட்டரில் மர்மநபர் சுற்றி திாியும் வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் மூலம், அந்த வீட்டில் திருடியது கணேஷ் என்பவர் தான் என அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, பெங்களூருவில் வசிக்கும் கணேஷ் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.
அவரது மனைவியிடம் போலீசார் விசாரித்து கணேஷ் பற்றிய தகவல்களை சேகரித்திருந்தனர். இதையறிந்த கணேஷ் வீட்டில் திருடிய நகைகள், பொருட்களுடன் சந்திரா லே-அவுட் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
Related Tags :
Next Story