உப்பள்ளி அருகே உரிய ஆவணங்கள் இன்றிகாரில் கொண்டு சென்ற ரூ.2¼ லட்சம் பறிமுதல்


உப்பள்ளி அருகே  உரிய ஆவணங்கள் இன்றிகாரில் கொண்டு சென்ற ரூ.2¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

உப்பள்ளி-

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி நடைபெறுகிறது. இந்தநிலையில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் தார்வார் மாவட்டத்திலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையல், உப்பள்ளி கப்பூர் பைபாஸ் சோதனை சாவடியில் உப்பள்ளி தேர்தல் அதிகாரிகள் மற்றும் பழைய உப்பள்ளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.2.37 லட்சம் இருந்தது தெரியவந்தது.

ஆனால் அந்த பணத்துக்கு காரில் வந்தவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. விசாரணையில் அவர் ஹாவேரியை சேர்ந்த தொழில்அதிபர் கிரண் பட்டேல் என்பதும், தொழில் சம்பந்தமாக ரூ.2.37 லட்சத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். ஆனாலும் தேர்தல் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். ஆனாலும் ஆவணங்களை காண்பித்து விட்டு பணத்தை வாங்கி செல்லும்படி தெரிவித்தனர். இதுகுறித்து பழைய உப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story