அழைப்பு மணி அடிக்காமலேயே... வீட்டு வாசலில் படமெடுத்தபடி எட்டி பார்த்த பாம்பு
வீடு ஒன்றின் வாசலில் அழைப்பு மணி அடிக்காமலேயே பாம்பு ஒன்று படமெடுத்தபடி எட்டி பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.
புதுடெல்லி,
சமூக ஊடகங்களில் நம்மை கவரும் வகையிலான பல வீடியோக்கள் வெளிவருவதுண்டு. அதுபோன்று, சமீபத்தில் டுவிட்டரில், வீட்டு வாசலில் பாம்பு ஒன்று படமெடுத்தபடி எட்டி பார்க்கும் வீடியோ ஒன்று வெளியாகி உறைய செய்துள்ளது.
அந்த வீடியோவை வெளியிட்ட பிஜென் என்ற நபர் பாதுகாப்பான பாதுகாப்பு அமைப்பு என அதற்கு தலைப்பிட்டு உள்ளார். அந்த வீடியோவை நபர் படமெடுக்கும்போது, வீட்டின் கதவு இடுக்கில் இருந்து வெளியே தலையை நீட்டி கொண்டிருக்கும் அந்த பாம்பு திடீரென அவரை தாக்க முயற்சிக்கிறது.
எனினும், அவர் சற்று தொலைவில் நின்றபடி வீடியோ பதிவு செய்துள்ளார். வீட்டின் மற்றொரு புறம் பெண் ஒருவர் நின்றபடி அதனை பார்த்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
அவர்களில் பலரும் பலவித விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர், வீடியோவை பார்த்து மிரண்டு போயுள்ளனர். ஒருவர் எவ்வளவு பெரிய அளவில் உள்ளது? அதனை அவர்கள் வெளியேற்றி விட முடிந்ததா? ஒருவேளை இது தென்ஆப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒன்றாக கூட இருக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.
பொதுவாக அழைப்பு மணி அடிக்கும்போது, வீட்டில் இருந்து யாரது? என்று குரல் வெளியே வரும். சில சமயங்களில் வந்திருப்பது தெரிந்தவர்கள் என்றால், வீட்டிலிருந்து ஆட்கள் வாசலுக்கு வருவார்கள். ஆனால், அழைப்பு மணி எதுவும் அடிக்காமல் வீட்டு வாசலில் பாம்பு ஒன்று எட்டி பார்க்கும் இந்த வீடியோ நெட்டிசன்களை மிரட்டியுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க... பாம்பின் கால் பாம்பறியும்...!! பயத்தில் பெண் வீசிய செருப்பை கவ்வி சென்ற பாம்பு; வைரலாகும் வீடியோ