பெண்ணின் ஆடையை கிழித்து மானபங்கப்படுத்திய கேளிக்கை விடுதி பாதுகாலர்கள் - அதிர்ச்சி சம்பவம்


பெண்ணின் ஆடையை கிழித்து மானபங்கப்படுத்திய கேளிக்கை விடுதி பாதுகாலர்கள் - அதிர்ச்சி சம்பவம்
x

கேளிக்கை விடுதிக்குள் நுழைய முயற்சித்தபோது அந்த பெண்ணை மறித்த விடுதி பாதுகாவலர் அவரை மானபங்கப்படுத்தியுள்ளனர்.

டெல்லி,

தலைநகர் டெல்லியின் தெற்கு எக்ஸ்டன்ஷன் பார்ட் - 1 பகுதியில் 'கோட்' என்ற தனியார் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த தனியார் கேளிக்கை விடுதிக்கு கடந்த 18-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பெண் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது, அந்த கேளிக்கை விடுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் அந்த பெண்ணையும் அவரது நண்பர்களையும் விடுதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பாட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண்ணையும் அவரது நண்பர்களையும் கேளிக்கை விடுதி பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது, கேளிக்கை விடுதியின் மேலாளரும், விடுதி பாதுகாவலர்கள் 2 பேரும் சேர்ந்த அந்த பெண்ணின் ஆடையை கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியில் தகாத முறையில் நடந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கேளிக்கை விடுதி ஊழியர்கள் தாக்கியதில் அதிர்ச்சியடைந்த பெண் மனநல ரீதியிலான பாதிப்புக்கு உள்ளான நிலையில் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story