வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது
வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு: பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகர் பகுதியில் அபர்ணா என்பவர் வசித்து வருகிறார். இவரது வயதான தந்தையை கவனித்து கொள்ள தாவணகெரே மாவட்டம் சன்னகிரியை சேர்ந்த உமாதேவி(வயது 43) என்பவர் வேலைக்கு சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அபர்ணாவின் வீட்டில் இருந்து தங்கநகைகள், பணம், வெள்ளி பொருட்களை திருடிவிட்டு உமாதேவி தப்பி சென்றார்.
இந்த திருட்டு சம்பவம் குறித்த புகாரின்பேரில் அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் சன்னகிரியில் வைத்து உமாதேவியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story