படுக்கைக்கு தீ வைத்து பெண் தற்கொலை


படுக்கைக்கு தீ வைத்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண் ஒருவர் படுக்கைக்கு தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்ததில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

மண்டியா:-

தீ விபத்து

மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா மாரசிங்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரேமா (வயது 42).கணவனை இழந்த இவருக்கு ஒரு மகன் உள்ளாார். அவர் பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் பிரேமா மட்டும் இருந்தார். கடந்த சில நாட்களாக இவர் மனம் நொந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மகன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினால், சரியாக பதில் அளிக்கவில்ைல என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பிரேமா, நேற்று அதிகாலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதற்கிடையில் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்த பார்த்தனர். அப்போது அங்கிருந்த ஒரு அறையில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

பெண் சாவு

இதையடுத்து அவர்கள் அந்த அறையில் சென்று பார்த்தனர். அங்கு படுக்கையில் தீ எரிந்து கொண்டிருந்தது. அதன் நடுவே பிரேமா கருகிய நிலையில் கிடந்தார். இதை பாாத்த அவர்கள் உடனே தண்ணீரை ஊற்றி படுக்கையில் எரிந்த தீயை அணைத்தனர். இதையடுத்து பிரேமாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் உடல் முழுவதும் தீயில் கருகியதால் அவர் இறந்துவிட்டார். இது குறித்து பேசரஹள்ளி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் படுக்கைக்கு தீ வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரியவந்தது. ஆனால் இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து பேசரஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story