திடீர் மாரடைப்பு: மதவழிபாட்டு தலத்தில் பெண் உயிரிழப்பு
மதவழிபாடு செய்ய வந்த லெட்சுமி என்ற பெண் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் லிங்கபூர் பகுதியை சேர்ந்த பெண் லெட்சுமி. இவர் ராஜனா சிரிசிலா மாவட்டம் விமுலாவாடி பகுதியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான ஸ்ரீராஜராஜேஷ்வர சுவாமி வழிபாட்டு தலத்திற்கு நேற்று காலை சென்றார்.
வழிபாட்டு தலத்திற்குள் கடவுள் வழிபாடு செய்ய லெட்சுமி வரிசையில் நின்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வழிபாட்டு தலத்தில் வரிசையில் நின்றபோது அப்படியே சுருண்டு விழுந்தார்.
அவரை மீட்ட மருத்துவக்குழுவினர் லெட்சுமியை பரிசோதனை செய்தனர். அதில் லெட்சுமி உயிரிழந்துவிட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து லெட்சுமியின் உடல் பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story