மின்சாரம் தாக்கி பெண் பலி


மின்சாரம் தாக்கி பெண் பலி
x

சிர்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

கார்வார்;


உத்தர கன்னடா மாவட்டம் சிர்சி தாலுகா எட்டகத்தே கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 55). விவசாயியான அவர் சொந்தமாக கால்நடைகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று தனது கிராமத்திற்கு அருகில் உள்ள வத்தினகத்தே கிராமத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்று இருந்தார்.

அங்குள்ள ஒரு கோழிப்பண்ணை அருகில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். அந்த கோழிப்பண்ணையை சுற்றியும் வனவிலங்குகள் உள்ளே நுழையாமல் இருக்க கம்பி வேலி போடப்பட்டு இருந்தது. அந்த கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் சரஸ்வதியின் உடல் எதிர்பாராதவிதமாக அந்த கம்பி மீது உரசியுள்ளது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. மேலும் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிர்சி புறநகர் போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றினர்.

மேலும் கம்பி வேலி மீது சட்டவிரோதமாக மின் இணைப்பு கொடுத்த கோழிப்பண்ணை உரிமையாளர் ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story